வவுனியா பாவற்குளத்தில் ஆயுதங்கள் மீட்பு!! (படங்கள்)

வவுனியா, பாவற்குளம் பகுதியில் இருந்து ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக உலுக்குளம் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா, பாவற்குளத்தில் இருந்து உலுக்குளம் நோக்கி காணப்படும் குளக்கட்டு பகுதியில் நேற்று மாலை பயணித்த ஒருவர் அப்பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு ஆயுதங்கள் சில இருப்பதை அவதானித்துள்ளார். இதனையடுத்து உலுக்குளம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அதனை மீட்பதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த பகுதியில் இருந்து பொலித்தீன் பைகளில் பாதுகாப்பாக சுற்றப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்றும், ரி 56 ரக துப்பாக்கி மகசின்கள் இரண்டும் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் மேலும் வெடிபொருட்கள் இருக்கின்றனவா என நீதிமன்ற அனுமதியுடன் இன்று விசேட அதிரடிப்படையினர் சோதனை மேற்கொள்ளவுள்ளதுடன், அதனை செயலிழக்கச் செய்வதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை உலுக்குளம் பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”


Comments (0)
Add Comment