வவுனியாவில் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகை!! (படங்கள்)

உலகளாவிய ரீதியில் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகின்ற ஒரு முக்கிய பண்டிகை, ஈதுல் அல்ஹா எனப்படும் புனித ஹஜ் பெருநாளாகும்.

இறை தூதர்களில் ஒருவரான இப்றாஹிம் நபியின் தியாகத்தை நினைவுகூறும் விதமாக இஸ்லாமிய நாட்காட்டியின் பிரகாரம் துல்ஹஜ் மாதம் பிறை பத்தில் ஹஜ் பெருநாள் கொண்டாடப்படுகின்றது.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அமைதியான முறையில் புனித ஹஜ் பெருநாள் தொழுகைகள் இடம்பெற்றுள்ளன.

இதற்கமைய வவுனியா மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி வாசல்களிலும் ஆண், பெண் இருபாலருக்கும் தனித்தனியாக பெருநாள் தொழுகைகள் இடம் பெற்றுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment