நட்சத்திர ஓட்டலில் 102 நாட்கள் தங்கிவிட்டு, பாதி பில்லை கட்டாமல் எஸ்கேப் ஆன நபர்..!!

தெலுங்கானா மாநிலத்தின் ஐதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ளது தாஜ் பஞ்சாரா நட்சத்திர ஓட்டல். சமீபத்தில், இந்த ஓட்டலில் சங்கர் நாராயணன் எனும் தொழிலதிபர் ஒருவர் தங்கியுள்ளார்.

இவர் மொத்தம் 102 நாட்கள் அந்த ஓட்டலில் தங்கி உள்ளார். இதற்கு ரூம் வாடகையாக ரூ.25.96 லட்சம் வந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், 13.62 லட்சத்தை கட்டிவிட்டார். மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.

தப்பியோட்டம்

ஓட்டல் நிர்வாகமும் இதனை நம்பி லேசாக விட்டுள்ளது. இதனையடுத்து ஒருநாள் யாரிடமும் சொல்லாமல் அந்த நபர் ஓட்டலில் இருந்து எஸ்கேப் ஆகியிருக்கிறார். சங்கரை காணவில்லை என்றதும், ஓட்டல் நிர்வாகம் அவரை போன் மூலம் தொடர்பு கொண்டுள்ளது.

ஆனால், பலனில்லை. மீண்டும் மீண்டும் முயற்சிக்கையில் போன் ஆப் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் உடனடியாக போலீசாரிடம் புகார் கொடுத்துள்ளது. இதன் அடிப்படையில் போலீசார், அந்த நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Comments (0)
Add Comment