மேற்கு வங்காளத்தில் மின்னல் தாக்கி 8 பேர் பலி..!!

இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்து வருகிறது. நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், மேற்குவங்காளத்தில் கடந்த சில நாட்களாக இடியுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. அம்மாநிலத்தின் புருலியா மற்றும் ஹூக்லி மாவட்டத்தில் இடியுடன் கூடிய கனமழையின் போது திடீரென மின்னல் தாக்கியது.

இந்த மின்னல் தாக்குதலில் சிக்கி ஐந்து பெண்கள் உள்பட 8 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர்.

Comments (0)
Add Comment