காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுக்கு செல்லும் பேருந்து சேவை ரத்து -இந்தியா பதிலடி..!!

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்துள்ளது. இதற்கு பாகிஸ்தான், சீனா உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்களவையிலும் இது குறித்த விவாதங்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

இந்த நடவடிக்கைக்கு பாகிஸ்தான் கடும்கண்டனம் விடுத்தது. இதன் காரணமாக பாகிஸ்தான் இந்தியாவுக்கான ரெயில் சேவையை நிறுத்தியது. இந்தியாவுக்கான தூதரை விலக்கியது. அடுத்தடுத்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

சம்ஜவுதா எக்ஸ்பிரஸ்

மேலும் இந்தியாவுக்கான பேருந்து சேவையை சமீபத்தில் நிறுத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா, டெல்லி-லாகூர் செல்லும் பேருந்து சேவையை நிறுத்தி வைத்துள்ளது.

டெல்லி கேட் பகுதியில் இருந்து பாகிஸ்தானுக்கு தினமும் காலை 6 மணிக்கு பேருந்து செல்வது வழக்கம். 1999ம் ஆண்டு முதல் இந்த சேவை இருந்து வருகிறது. இது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2001ம் ஆண்டு ஏற்கனவே பயங்கரவாதிகள் தாக்குதல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு இந்த சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Comments (0)
Add Comment