கிளிநொச்சியில் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும்!! (படங்கள்)

கிளிநொச்சியில் சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடும் முத்தமிழ் சங்கமமும் நிகழ்வு

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்துமாநாடும் முத்தமிழ் சங்கமமும் நிகழ்வு கிளிநொச்சி கூட்டுறவுச்சபை மண்டபத்தில் எதிர்வரும் 18/08/2019 ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது.

இலங்கையில் கடந்த ஐந்து வருடங்களாக சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இந்து மாநாடு சிறப்பாக இடம்பெற்றுவருகின்றது. இவ்வருடம் கிளிநொச்சியில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு தமிழ்நாட்டிலிருந்து கௌமார மடாலய ஆதினம் முனைவர் தவத்திரு குமரகுருபர சுவாமிகள் மற்றும் ஸ்ரார் விஜய் தொலைக்காட்சி தெய்வீக சங்கம நிகழ்ச்சி தொகுப்பாளர் சிவத்தமிழ் சிரோன்மணி திருமதி சுமதிஶ்ரீ ஈழம் மற்றும் பிரித்தானியாவின் சமயப்பெரியார்கள் அறிஞர் பெருமக்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
“அதிரடி” இணையத்துக்காக வன்னியில் இருந்து “வன்னியூரான்”

Comments (0)
Add Comment