எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது வவுனியா ஜங்பைட் விளையாட்டுக் கழகம்!! (படங்கள்)

இளைஞர் எழுச்சி கிண்ணத்தை சுவீகரித்தது வவுனியா ஜங்பைட் விளையாட்டுக் கழகம்

2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் வவுனியா, ஜங் பைட் விளையாட்டுக் கழகம் கிண்ணத்தை சுவீகரித்து.

வவுனியா மாவட்ட தமிழ் மக்கள் கூட்டனியின் ஏற்பாட்டில் 2019 ஆம் ஆண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ண மென்பந்து சுற்றுப் போட்டியில் 32 அணிகள் பங்குபற்றியிருந்தன. குறித்த போட்டியானது நான்கு மைதானங்களில் நடைபெற்றிருந்த நிலையில் இறுதிப் போட்டி பழைய கற்பகபுர மைதானத்தில் நடைபெற்றது.

இறுதிப் போட்டியில் வவுனியா, பாலாமைக்கல் ஜங்பைட் விளையாட்டுக் கழகமும், இராசேந்திரங்குளம் நியூவன் விளையாட்டுக் கழகமும் மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இறுதி ஓவரில் பாலமைக்கல் ஜங்பைட் விளையாட்டுக்கழகம் வெற்றி பெற்று இவ்வாண்டுக்கான இளைஞர் எழுச்சிக் கிண்ணத்தை சுவீகரித்தது.

குறித்த போட்டியில் தெரிவு செய்யப்பட்ட சிறந்த பந்து வீச்சாளர், களத்தடுப்பாளர், துடுப்பாட்ட வீரர், சிறந்த அணி உள்ளிட்ட பல்வேறு கிண்ணங்களும் இதன்போது வழங்கப்பட்டது. எழுச்சிக் கிண்ணத்தை முன்னாள் வடமாகாண முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டனியின் செயலாளர் நாயகமுமான சி.வி.விக்கினேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டனியின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் செ.சிறிதரன், கூட்டனியின் இளைஞர் அணித் தலைவர் கிருஸ்ணமேனன், தமிழ் மக்கள் கூட்டனியின் மத்திய குழு உறுப்பினர்கள், தினப்புயல் பத்திரிகை ஸ்தாபனத்தின் பணிப்பாளர் ச.பிரகாஸ், நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட பலரும் இணைந்து வழங்கி வைத்தனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கலந்து சிறப்பித்து இருந்தமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment