ம.வி.மு ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தமது தீர்மானத்தில் நிலையாக இருக்கும் வேண்டும்!!

ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க மக்கள் விடுதலை முன்னணி எடுத்துள்ள தீர்மானம் குறித்து மகிழ்ச்சி அடைவவதாக தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாமில் கொழும்பில் இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனை கூறினார்.

மக்கள் விடுதலை முன்னணி ஜனாதிபதி தேர்தல் முடியும் வரை தமது தீர்மானத்தில் நிலையாக இருக்கும் என எதிர்பார்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை வரவேற்க நேற்று பதுளையில் நடைபெற்ற கூட்டம் தொடர்பிலும், அவர் இதன் போது கருத்து தெரிவித்தார்.

அதாவது ஐ.தே.க ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் செயற்பாடுகளை பிரதிபளிக்க தூண்டப்பட்டுள்ளதாக கூறினார்.

Comments (0)
Add Comment