அமெரிக்க குறும்பட விழாவில் திருப்பூர் சிறுமிக்கு சிறந்த குழந்தை நட்சத்திர விருது..!!

திருப்பூர் அங்கேரிபாளையத்தை சேர்ந்தவர் பி.யூ.கிருஷ்ணன். இவரது மகள் பேபி மஹா ஸ்வேதா. இவர் வெங்கமேடு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வருகிறார்.

கேரளாவை சேர்ந்த சுஜித் தாஸ் என்பவர் இயக்கிய நான் யாரிடம் சொல்ல வேண்டும் என்ற பெயரில் எடுக்கப்பட்ட மலையாள குறும்படம் ஒன்றில் நடித்திருந்தார்.

இந்த படம் கடந்த 2-ந்தேதி அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற சர்வதேச குறும்பட விழாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விழாவில் 60 நாடுகளைச் சேர்ந்த குறும்படங்கள் விருதுகளுக்காக பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் திருப்பூர் சிறுமி நடித்த குறும்படம் விருது வென்றுள்ளது. சிறந்த குழந்தை நட்சத்திர விருது அந்த சிறுமிக்கு இந்த குறும்படம் மூலமாக கிடைத்துள்ளது.

இது தொடர்பாக சிறுமியின் பெற்றோரிடம் பேசிய போது, 5 முதல் 12 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் எங்களது மகளுக்கு இந்த விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்றனர்.

Comments (0)
Add Comment