இராணுவ வீரர் ஒருவர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை !!

கொழும்பில் அமைந்துள்ள இராணுவ தலைமையகத்தில் பணியில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இன்று (14) அதிகாலை 4.10 மணி அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவை, அத்தனகடவல பகுதியை சேர்ந்த 27 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவராவார்.

குறித்த இராணுவ வீரர் இராணுவ தலைமையகத்தின் பொறியியல் பிரிவை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து புறக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment