இருவேறு விபத்துக்களில் மூவருக்கு காயம்!!

கொழும்பில் இருந்து அறுவக்காடு குப்பை கொட்டும் இடத்திற்கு குப்பைகளுடன் பயணித்த டிபர் ரக வாகனங்கள் இரண்டு ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்து இன்று (14) அதிகாலை 2 மணி அளவில் புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி, கறிகட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் பயணித்துக் கொண்டிருந்த டிப்பர் வாகனத்துடன் பின்னால் வந்த மற்றுமொரு குப்பை ஏற்றிய டிப்பர் வண்டி மோதியதால் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் பின்னால் பயணித்த டிப்பர் வண்டியின் சாரதியே காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, சிலாபம் – கொழும்பு பிரதான வீதியின் மாரவில – முத்துகடுவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த இருவர் மாரவில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து நேற்றிரவு (13) 9 மணி அளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பில் இருந்து வந்த சிறிய ரக பாரவூர்தி ஒன்றும் எதிர் திசையில் பயணித்த டிப்பர் வண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் இரு வாகனங்களினதும் சாரதிகளே காயமடைந்துள்ளதாக தெரிவிக்கும் மாரவில பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment