ரஷ்யாவுடன் நட்புறவு சிறந்த நிலையில் உள்ளது – சீன மந்திரி தகவல்..!!

சுற்றுலாத்துறையில் ரஷ்யா-சீனா இடையிலான ஒத்துழைப்பு தொடர்பாக ரஷ்யாவின் விளாடிவோஸ்டோக் நகரில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சீனாவின் கலாச்சாரத்துறை துணை மந்திரி ஷாங் சு பங்கேற்றார். அவர் பேசுகையில், ‘ரஷ்யா மற்றும் சீனா இரு நாடுகளுமே தற்போது நல்ல தலைவர்களை பெற்றுள்ளது. ரஷ்யா-சீனா உறவு பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது. முன்பு இருந்ததை விட தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளது” என்றார்.

2019-ம் ஆண்டுடன் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவிற்கும் பீஜிங்கிற்குமான தூதரக உறவுகள் தொடங்கி 70 ஆண்டுகள் ஆகின்றன எனவும் அவர் குறிப்பிட்டார்.

Comments (0)
Add Comment