வாக்காளர் பட்டியலை 23 இல் பார்வையிடலாம்!!

தேர்­தல் வாக்­கா­ளர் பட்­டி­யலை எதிர்­வ­ரும் 23 ஆம் திகதி தொடக்­கம் பார்­வை­யிட முடி­யும் என்று யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்தின் தேர்­தல் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

“இந்த ஆண்­டுக்­கான வாக்­காளர் பட்­டி­யல் தயா­ரிக்­கும் பணி­ கள் கடந்த மாதம் தொடக்­கம் கிராம அலு­வ­ல­ர்கள் ஊடாக நடை­பெற்­றது.
தற்­போது அதற்­கான மதிப்­பீட்டுப் பணி­கள் நடை­பெற்று வரு­கி­றது. இவ்­வாறு மதிப்­பீடு செய்­யப்­பட்டு வாக்­கா­ளர் படி­வத்­தில் நீக்க வேண்­டிய பெயர்­கள் மற்­றும் சேர்க்க வேண்­டிய பெயர்­கள் அடங்­கிய ஏ,பி படி­வங்­களே 23 ஆம் திகதி தொடக்­கம் காட்­சிப்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளன.

மாவட்­டச் செய­ல­கம்,பிர­தேச செய­ல­கம்,கிராம அலு­வ­லர் பிரி­வில் வாக்­கா­ளர் பட்­டி­யல் காட்­சிப்­படுத்­தப்­ப­டும்.அதன் பின்­னர் கோரிக்கை விட­யங்­கள் நடை­பெற்று.இந்த வரு­ டம் தேர்­த­லுக்கு வாக்­க­ளிக்கத் தகு­தி­யு­டை­ய­வர்­க­ளின் மொத்த விவ­ரம் இறு­தி­யாக வெளி­யி­டப்­ப­டும்.

வாக்­கா­ளர் பட்­டி­ய­லில் தத்­த­மது பெயர்­கள் இடம்­பெற்­றி­ருந்­தால் மாத்­தி­ரமே தேர்­த­லில் வாக்­க­ளிக்க முடி­யும். எனவே, தமது பெயர் சேர்க்­கப்­பட்­டி­ருப்­பதை சகல வாக்­கா­ளர்­க­ளும் உறுதி செய்­வது அவ­சி­யம் என்று தெரி­விக்­கப்­பட்­டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment