ஆணின் சடலம் மீட்பு – பொலிஸார் பல கோணங்களில் விசாரணை!! (படங்கள்)

அட்டன் மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாமிமலை சின்ன சோலங்கந்தை பகுதியில் உள்ள நீரோடையிலிருந்து உயிரிழந்த நிலையில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சடலம் 14.08.2019 அன்று காலை மீட்கப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

நீரோடையில் சடலம் ஒன்று இருப்பதாக பிரதேச மக்களினால் பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்துஇ குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரது சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதோடு, சடலம் இதுவரை அடையாளம் காணப்படாத நிலையில் மரண விசாரணைகளின் பின் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸாரும், அட்டன் பொலிஸ் நிலைய கைரேகை பிரிவினரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக மலையகத்தில் இருந்து “மலையூரான்”

Comments (0)
Add Comment