பாகிஸ்தானில் சோகம் – சுவர் இடிந்து விழுந்து 6 பேர் பலி..!!

பாகிஸ்தான் நாட்டின் வடபகுதியில் அமைந்துள்ளது கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதி. பாகிஸ்தானில் இன்று 73வது சுதந்திர தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கில்ஜித்- பால்டிஸ்தான் பகுதியில் சுதந்திர தின நிகழ்ச்சியை பார்க்க ஏராளமானோர் திரண்டிருந்தனர். அப்போது அங்கிருந்த சுவர் திடீரென இடிந்து விழுந்தது.

இந்த விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து அங்கு விரைந்து சென்ற மீட்புப் படையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர்களில் சிலரது நிலைமை மோசமாக உள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுதந்திர தின நிகழ்ச்சியை பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 6 பேர் பலியானது பாகிஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment