ஆப்கானிஸ்தானில் தற்கொலைப் படைகளின் பயிற்சி மையத்தை அழித்த ராணுவம்..!!

ஆப்கானிஸ்தானின் லோகர் மாகாணம், பராகி பராக் மாவட்டத்தில் உள்ள தகாப் பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். இதில், தற்கொலை படையினரின் பயிற்சி மையம் அழிக்கப்பட்டது.

இது குறித்து ராணுவம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ‘இந்த தாக்குதலில் இதில் 8 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 2 பேர் தலிபான் அமைப்பைச் சேர்ந்த முக்கியமான உள்ளூர் பயங்கரவாதிகள். பயங்கரவாதிகளின் பயிற்சி மையத்தில் இருந்த உயர் ரக ஆயுதங்களும், வெடி மருந்துகளும் அழிக்கப்பட்டன’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment