ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவல் முறியடிப்பு..!!

இந்தியாவில் நாளை சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் உரி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகள் நேற்றிரவு ஊடுருவ முயன்றனர். அவர்களை இந்திய ராணுவம் விரட்டியடித்தது.

பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக பாகிஸ்தான் ராணுவமும் தங்களது நிலைகளில் இருந்து கொண்டு இந்தியாவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியது.

இந்நிலையில், இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்தியில், காஷ்மீருக்குள் பயங்கரவாத குழுவை அனுப்ப பாகிஸ்தான் ராணுவம் முயற்சி மேற்கொண்டது. அவர்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளது.

Comments (0)
Add Comment