பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதியை அழைப்பதற்கான திகதி அறிவிப்பு?

உயிரித்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் ஆராயும் பாராளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஜனாதிபதியை அழைப்பதற்கான திகதி அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவதில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என அந்த குழுவின் தலைவரும் பிரதி சபாநாயகருமான ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் இதுவரை நாள் ஒன்று குறிக்கப்படவில்லை எனவும், எதிர்வரும் தினங்களில் தெரிவுக்குழு உறுப்பினர்கள் கூடி ஜனாதிபதியை தெரிவு குழுவுக்கு அழைப்பது சம்பந்தமாகவும் அதற்கான கடிதத்தை தயாரிப்பது குறித்து ஆராய்வர் எனவும் அவர் தெரிவித்த்துள்ளார்.

எவ்வாறாயினும் ராகமையில் இன்று நடைப்பெற்ற நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அந்த குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஜனாதிபதியின் சாட்சியத்தின் பின்னர் குழுவின் இறுதி அறிக்கை தயாரிக்கப்படும் என கூறினார்.

பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் சாட்சியம் வழங்க குறித்த குழுவுக்கு ஜனாதிபதி வருகை தருவார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

சாட்சி வழங்குவதற்கு ஏற்ற 3 திகதிகளை ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவற்றில் விருப்பமான தினத்தில் ஜனாதிபதி தெரிவுக் குழுவுக்கு சாட்சி வழங்க வருகை தரலாம் எனவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment