கஞ்சிபான இம்ரானுடன் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்கு தொடர்பு? !!

மாகல்கந்தே சுனந்த தேரர் பொலிஸ் தலைமையகத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சிலர், தடுத்து வைக்கப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரான் என்ற திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் நபருடன் தொடர்புகளை பேணுவதாக தெரிவித்து மாகல்கந்தே சுனந்த தேரர், பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருந்தார்.

குறித்த முறைப்பாடு தொடர்பில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் தலைமையில் மேல் மாகாண கண்காணிப்பின் கீழ் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளரை பயன்படுத்தி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் தெரிவித்துள்ளார்.

ஒரு சில அதிகாரிகள் அந்த சந்தேக நபருடன் தொடர்புகளை பேணியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தால், அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணைகளை நடத்துமாறு உத்தரவிடபட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் காரியலயத்தின் அறிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments (0)
Add Comment