பல வருடங்களாக அனுமதியற்ற முறையில் மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 13 பேர் கைது!!

சிறிகதுயாய பிரதேசத்தில் அனுமதியற்ற முறையில் மாணிக்கக்கல் அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவந்த 13 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவர்கள் பல வருடங்களாக சிறிகதுயாய பிரதேசத்தின் 503 ஆம் பகுதியில் சட்டவிரோத அகழ்வு பணிகளில் ஈடுபட்டுவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தேசிய சுரங்க பணியகம் மற்றும் மாணிக்கக்கல் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய அங்கு விசேட சுற்றிவளைப்பு ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

எனினும் அவர்கள் 13 பேரும் தப்பி ஓடியதாகவும் அதன் பின்னர் பக்கமுன பொலிஸார் சூட்சுமான முறையில் இவர்களை கைது செய்துள்ளனர்.

இதன்போது மண் அகழ்வுக்கு பயன்படுத்திய மண்வெட்டி உள்ளிட்ட பொருட்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களை தவிர மேலும் பலர் காட்டில் பதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் குறித்த மரத்தின் இரண்டு பக்கங்களில் பாரிய பள்ளங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், அங்கு பாரிய அளவில் சட்டவிரோத அகழ்வையும் மேற்கொண்டுள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி பொலிஸ் பிணையில் விடுவிக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Comments (0)
Add Comment