மடு மாதா திருவிழாவை முன்னிட்டு விசேட ரயில் சேவை!!

மன்னார், மடு மாதாவின் வருடாந்த திருவிழாவை முன்னிட்டு நீர்கொழும்பில் இருந்த விசேட ரயில் சேவையை முன்னெடுக்க ரயில்வே திணைக்களம் தீர்மானித்துள்ளது.

அதற்கமைய இன்று காலை 7.30 க்கு புறப்பட்ட குறித்த ரயில் குரண, கட்டுநாயக்க, சீதுவ, ஜா-எல, ராகமை, கம்பஹா, வெயாங்கொட மற்றும் குருணாகல் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படுகின்றது.

அந்த ரயில் பிற்பகல் 3 மணி அளவில் மடு றோட்டு ரயில் நிலையத்தை அண்மிக்கும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதேபோல் நாளை மாலை 4.30 க்கு மடு றோட்டு ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ரயில் இரவு 12.30 க்கு நீர்கொழும்பு ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது.

Comments (0)
Add Comment