தமிழர்களை அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை !!

கருணா உடனும் டக்ளஸ் உடனும் கூட்டுச் சேருவது கடினம் எனவும் அதனை மக்கள் விரும்பவில்லை எனவும் தமிழ் மக்கள் கூட்டணி அறிவித்துள்ளது.

அந்த கூட்டணியின் ஸ்தாபகரும் செயலாளர் நாயகமுமான முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பிள்ளையானுக்கு வரவேற்பு இருப்பதை ஏற்றுக்கொள்வதாக குறிப்பிட்டுள்ள அவர், சுரேஷ் பிரேமசந்திரன் தனது அமைப்புடன் கொள்கை அளவில் இணங்கி பயணிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, கஜேந்திரகுமாரின் கட்சி கொள்கை ரீதியாக ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும் எனவும், அவர்களை தமது கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள பல விட்டுக் கொடுப்புக்களை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழர்களை தொடர்ந்தும் அடக்கி ஆள வேண்டும் என்பதே தெற்கு அரசியல்வாதிகளின் சிந்தனை என தெரிவித்துள்ளதாக அவர், அதனை மையப்படுத்தியே காய்கள் நகர்த்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

ஆகவே, போதுமான நெருக்கடிகள் இன்றி தெற்கு தலைவர்கள் தமிழர்களுக்காக எதனையும் செய்ய துணியமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments (0)
Add Comment