பசியால் தன்னைத்தானே கடித்து, விழுங்க முயற்சித்த பாம்பு -அபூர்வ காட்சி..!!

பென்சில்வேனியாவில் பாம்பு, ஆமை போன்ற ஊர்வன உயிரினங்களை காக்க செயல்படும் இடம்தான் Forgotten Friend Reptile Sanctuary. இந்த காப்பகத்தில் பாதுகாக்கப்படும் பாம்பு ஒன்று, ராஜ நாக வகையைச் சேர்ந்ததாகும்.

இந்த பாம்பு, பசியில் தன் வால் பகுதியிலேயே வாயில் நுழைத்து, கடித்து விழுங்க ஆரம்பித்துவிட்டது. இதனை கண்ட அந்த காப்பகத்து ஊர்வன வல்லுநர் வீடியோவாக எடுத்துள்ளார். மேலும் அந்த பாம்பை காப்பாற்றியும் உள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘சில பாம்புகளுக்கு பசி வந்தால் மற்ற பாம்புகளை விழுங்குவது வழக்கம். மிகவும் அரிதாக சில பாம்புகள் தன்னைத்தானே விழுங்கும். அதன் வாலை வேறொரு பாம்புதான் என நினைத்து கடிக்க ஆரம்பித்துவிடும்.

கடிப்பது தன் உடல்தான் என தெரிந்ததும், விட்டுவிடும். இந்த காப்பகத்தில் நல்ல முறையில் உணவுகள் கொடுக்கப்படும்போதும், ஏன் இப்படி செய்தது என்று தெரியவில்லை’ என கூறினார்.

மேலும் அந்த பாம்பின் வாயில் இருந்து அதன் வாலை கைகளால் எடுத்துவிட்டார். இதனை வீடியோவாக எடுத்த அவர், முகநூலில் வெளியிட்டார். இதனை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர்.

Comments (0)
Add Comment