சட்டப்பிரிவு 370 ரத்தானதால் ஜம்மு காஷ்மீர், லடாக் மக்கள் மகத்தான பலனடைவார்கள் – ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!!

நாடு முழுவதும் நாளை 73-வது சுதந்திர தின விழா கோலகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று இரவு 7 மணிக்கு அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷன் தொலைக்காட்சிகளில் நாட்டு மக்களுக்கு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

நாட்டு மக்களுக்கு சுதந்திர தின வாழ்த்துக்கள். சுதந்திரப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு எனது வீர வணக்கம்.

சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தொடர் மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களவை மற்றும் மாநிலங்களவையில் பல்வேறு முக்கிய மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதேபோல், அடுத்த 5 ஆண்டிலும் பாராளுமன்றம் சிறப்பாக செயல்பட வேண்டும்.
பாராளுமன்ற கூட்டத் தொடரில் முத்தலாக் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டது சிறப்பானதாகும்.

கோடை விடுமுறையில் 17வது பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றது. நிலையான ஆட்சி நடைபெற வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால் அந்தந்தப் பகுதி மக்கள் மகத்தான பலனடைவார்கள். 370-வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டதன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு கல்வி உரிமை, இடஒதுக்கீடு கிடைக்கும் என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment