வீட்டிற்கு போக வேண்டும்… கெஞ்சிய ஜிகாதி! பிரித்தானியா அதிரடி அறிவிப்பு; கடும் கோபத்தில் கனடா..!!

ஜிகாதி ஜாக் என்று அறியப்படும் ஐ.எஸ் அமைப்பை சேர்ந்தவனின் பிரித்தானியா குடியுரிமை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயதான ஜாக் லெட்ஸ், பிரித்தானியா மற்றும் கனடா குடியுரிமையை வைத்துள்ளார், ஆனால், சிரியாவில் பயங்கரவாதக் குழுவுடன் இணைந்த பின்னர் தன்னை ஒரு பிரித்தானியாவின் எதிரி என்று பிரபலமாக அறிவித்தார்.

எவ்வாறாயினும், சிறைபிடிக்கப்பட்ட பின்னர், முஸ்லிமாக மதமாறிய ஜாக், பிரித்தானியர்களை வெடிக்க வைக்கும் எண்ணம் இல்லை என்று கூறி, மீண்டும் தன்னை பிரித்தானியா ஆக்ஸ்போர்டுஷைரில் உள்ள வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறு கெஞ்சினார்.

தற்போது ஒரு குர்திஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாக், 2014 ஆம் ஆண்டு சிரியாவிற்கு தப்பி ஓடினார். சிரியாவில், அவர் தனது பெயரை அபு முகமது என்று மாற்றி, ஈராக்கிய பெண்ணை மணந்தார், அவருக்கு முஹம்மது என்ற மகனும் உள்ளார்.

இந்நிலையில், பிரித்தானியா உள்துறை அலுவலகம் ஜாக்கின் பிரித்தானியா கடவுச்சீட்டை ரத்து செய்தது, இப்போது அவரை கனடா அரசாங்கத்தின் பொறுப்பாக ஆக்கியுள்ளது

பிரித்தானியாவின் இந்த முடிவு கனடாவின் கோபத்தைத் தூண்டியதாகக் கூறப்படுகிறது, அங்குள்ள அதிகாரிகள் அவருக்கு கனடாவுடன் மிகக் குறைவான தொடர்பு இருந்தது என்று கூறுகிறார்கள்.

ஆனால், பிரித்தானியா உள்துறை அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது: அதிகாரிகள், வழக்கறிஞர்கள் மற்றும் உளவுத்துறை அமைப்புகளின் ஆலோசனைகள் மற்றும் கிடைக்கக்கூடிய அனைத்து தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டே தேசிய குடியுரிமையை ரத்து செய்வது குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டது.

இந்த நடவடிக்கை மிகவும் ஆபத்தான சில நபர்கள் முன்வைக்கும் பயங்கரவாத அச்சுறுத்தலை எதிர்கொண்டு, நம் நாட்டைப் பாதுகாப்பாக வைத்திருக்க ஒரு வழியாகும் என குறிப்பிட்டார்

Comments (0)
Add Comment