லொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு பணத்தை வாங்க ஆளில்லை! இப்படியும் நடக்குமா?..!!

கனடாவின் ஒன்றாறியோவில் லொட்டரியில் விழுந்த $4.7 மில்லியன் பரிசு தொகையை வாங்க வெற்றியாளர்கள் யாரும் உரிமை கோரவில்லை என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான தகவலை ஒன்றாறியோ லொட்டரி இணையதளம் வெளியிட்டுள்ளது.அதனபடி 27 லொட்டரிகளில் விழுந்த $4.7 மில்லியன் மதிப்பிலான பரிசு பணத்தை வெற்றியாளர்கள் உரிமை கோராமல் உள்ளனர்.

இத லொட்டரி சீட்டுகள் விரைவில் காலாவதி ஆகவுள்ள நிலையில் பரிசு பணத்தை வெற்றியாளர்கள் பெற்று கொள்வார்களா என கேள்வி எழுந்துள்ளது.

இதில் ஒரு லொட்டரி சீட்டுக்கு மட்டும் பம்பர் பரிசாக $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இறுதி வரை இந்த பரிசு பணத்துக்கு யாரும் உரிமை கோரவில்லை என்றால் ஒன்றாறியோ லொட்டரி கார்ப்பரேஷன் சட்டத்தின் படி பரிசு பணமானது மாகாண அரசின் கருவூலத்துக்கு சென்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது

Comments (0)
Add Comment