பிறக்காத பிள்ளையை இறந்ததாக கூறி இணையத்தில் பணம் வசூலித்த இளம் தம்பதி: அம்பலமான மோசடி..!!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்த இளம் தம்பதி ஒன்று பிறக்காத தங்களது பிள்ளையை இறந்ததாக கூறி பணம் வசூலித்த சம்பவம் நண்பர்களால் அம்பலமாகியுள்ளது.

பென்சல்வேனியா மாகாணத்தின் சோமர்செட் கவுண்டி பகுதியில் குடியிருந்து வருபவர்கள் ஜெஃப்ரி மற்றும் கெய்சி லாங் தம்பதி.

இவர்களே பிறக்காத தங்கள் பிள்ளையை இறந்ததாக கூறி சமூக வலைதளம் மூலமாக வசூல் வேட்டை நடத்தியவர்கள்.

சமூக வலைதளத்தில் கெய்சி லாங் ஒருமுறை தாம் கர்ப்பமாக இருப்பதாக பதிவிட்டிருந்தார். தொடர்ந்து அது தொடர்பான புகைப்படங்களையும் கருத்துகளையும் பதிவிட்டு வந்துள்ளார்.

இறுதியில் இரண்டு மாத காலம் தமக்கு முழு ஓய்வு தேவை என கூறி, சமூக வலைதளத்தில் இருந்து மாயமானார்.

பின்னர் ஒரு நாள் தங்களுக்கு அழகான ஆண் பிள்ளை பிறந்தது என்றும், ஆனால் சில மணி நேரத்தில் இறந்துவிட்டதாகவும் குழந்தையின் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்.

இந்த சோகமான பதிவுக்கு பலர் இரங்கல் தெரிவித்துள்ளதுடன், அந்த தம்பதியின் கோரிக்கையை ஏற்று இறுதிச் சடங்கு நிறைவேற்ற நிதியுதவியும் அளித்து வந்துள்ளனர்

Comments (0)
Add Comment