பேச்சுவார்த்தை என்றால், ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே: ராஜ்நாத் சிங்..!!

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக நீக்கியது. இதனால் பாகிஸ்தான் இந்திய உடனான அனைத்து வகை உறவுகளையும் முறித்துள்ளது. ஐ.நா.விலும் முறையிட்டது. ஆனால் சீனாவைத் தவிர மற்ற நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவு அளித்ததால் பாகிஸ்தான் முயற்சி தோல்வியடைந்தது.

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான பிரச்சனை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்படுமா? என்ற கேள்வி எழும்பிய வண்ணமே உள்ளது.

இந்நிலையில் ஹரியானாவில் நடந்த பா.ஜனதா கட்சி சார்பில் நடைபெற்ற பேரணியில் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றால் அது ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டும்தான் என்று ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் உறுதிபட தெரிவித்துள்ளார்.

ராஜ்நாத் சிங் இதுகுறித்து பேசுகையில் ‘‘பாகிஸ்தானுடன் இடம் பிரச்சனை குறித்து நாம் பேச்சுவார்த்தை நடத்துவதாக இருந்தால், இது ஆக்கிரமிப்பு காஷ்மீரை பற்றி மட்டுமே. மற்ற விவகாரம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படமாட்டாது.

அப்படி அனைத்து வகை பிரச்சனையை பற்றி பேச வேண்டுமென்றால், அவர்கள் பயங்கரவாதத்திற்கு உதவுவது, ஊக்குவித்தல் ஆகியவற்றை நிறுத்த வேண்டும்.

தற்போது அவர்களை பாதுகாப்பதற்காக பல்வேறு நாட்டின் கதவுகளை பாகிஸ்தான் தட்டி வருகிறது. நாங்கள் என்ன குற்றம் செய்தோம், நாங்கள் ஏன் மிரட்டப்படுகிறோம் என்று முறையிடுகிறார்கள். எனினும், அமெரிக்கா அவர்களின் கோரிக்கையை ஏற்காமல் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ளுங்கள் என்று திருப்பி அனுப்பிவிட்டது.

நமது நாட்டை பாகிஸ்தான் பயங்கவாதத்தை பயன்படுத்தி பிரிக்க பார்க்கிறது. ஆனால், 65 அங்குல மார்பளவு கொண்ட நமது பிரதமர், இந்தியா எப்படிபட்ட நடவடிக்கை எடுக்கும் என்பதை காட்டியுள்ளார். புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு நமது விமானப்படை பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தியது’’ என்றார்.

Comments (0)
Add Comment