ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜி-7 மாநாட்டில் பங்கேற்க மாட்டார்..!!

45வது ஜி-7 மாநாடு பிரான்ஸ் நாட்டின் பையாரிட்ஸ் நகரில் ஆகஸ்ட் 24-26 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் அமெரிக்கா, கனடா, இத்தாலி, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாட்டின் தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இம்மாநாட்டில் ஐரோப்பிய ஆணைய தலைவர் ஜீன் க்ளாட் ஜங்கெர் கலந்து கொள்ளமாட்டார் என ஐரோப்பிய ஆணைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், ‘‘இம்மாத தொடக்கத்தில் ஜங்கெர் அவர்களுக்கு பித்தப்பையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன் காரணமாக அவர் நீண்ட தூர பயணம் செய்யக் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர், எனவே அவரால் ஜி 7 மாநாட்டில் பங்கேற்க இயாலாது. தற்போது அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது’’ என தெரிவித்தார்.

Comments (0)
Add Comment