மூவர் இன்று தெரிவுக்குழு முன்னிலையில்!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று (20) மீண்டும் ஒன்று கூடவுள்ளது.

இன்று பிற்பகல் 2 மணியளவில் பாராளுமன்ற தெரிவுக்குழுவின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் இன்று உயர்நீதிமன்ற நீதிபதி விஜித் மலல்கொட, முன்னாள் அமைச்சு ஒன்றின் செயலாளரான பத்மசிறி ஜயமான்ன மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்ககோன் ஆகியோரிடம் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு விசாரணை நடத்தவுள்ளது.

இதற்கு முன்னரும் என்.கே.இளங்ககோன் மற்றும் பத்மசிறி ஜயமான்ன ஆகியோரிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Comments (0)
Add Comment