பரசூட் பயிற்சியின் போது கீழே விழுந்து இராணுவ வீரர் பலி!!

பரசூட் பயிற்சியின் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது கீழே விழுந்ததில் இராணுவ விஷேட படைப்பிரிவின் வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது பரசூட் செயலிழந்து கீழே விழுந்துள்ளதாக இராணுவத்தினர் தெரிவிக்கின்றனர்.

இன்று (20) காலை அம்பாறை, உகண விமானப்படை தளத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

பரசூட் பயிற்றுவிப்பாளர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments (0)
Add Comment