2 மாத குழந்தையின் உயிரை பறித்த கோர விபத்து!!

நீர்க்கொழும்பு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட 60 அடி வீதியின் ஜூட் பள்ளிவாசலுக்கு அருகில் முச்சக்கரவண்டி ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த 2 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ள நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்த குழந்தை நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நீர்க்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்த பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

முச்சக்கரவண்டியை செலுத்தி சென்ற குழந்தையின் தந்தையும் மற்றும் 2 வயது அவரது ஆண் குழந்தையும் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

விபத்து தொடர்பில் நீர்க்கொழும்பு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Comments (0)
Add Comment