97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் உதவிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

97ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களால் 50 மாணவர்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய 1997ஆம் ஆண்டு மகாவித்தியன்ஸ்களான திரு. நடராஜா செல்வகுமார், திரு. கி. குறூஸ், திரு. ஞா. ஜினேஸ் ஆகியோரின் நிதி உதவியில் வசதியற்ற வறிய 50 மாணவர்களுக்கு பல்வேறு உதவிகள் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் தலைமையில் இன்று (22.08.2019) வழங்கி வைக்கப்பட்டுள்ளது

வவுனியா மாவட்ட செயலகத்தினால் தெரிவு செய்யப்பட்ட 10 வசதியற்ற மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகள், 20மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள், 20மாணவர்களுக்கு மூக்குக்கண்ணாடிகள் என்பன மாவட்ட செலயக கேட்போர் கூடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு. ஜ. எம். ஹனீபா மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ. பாலகுமார், பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி எம். சிவகுமாரி, மாவட்ட சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் திரு. ஜெ. ஜெயக்கெனடி, மாவட்ட மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. உ. லதா, பிரதேச மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. சி. சுபாசினி மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment