சுவிஸில் 4,000 டன் உணவுகளை ஏழைகளுக்கு விநியோகித்த நபர்: விருது வழங்கி கெளரவிப்பு..!!

சுவிட்சர்லாந்தில் வீணடிக்கப்படும் உணவுகளை சேகரித்து தொண்டு நிறுவனம் சார்பில் ஏழைகளுக்கு விநியோகம் செய்த நபரை விருது வழங்கி கெளரவிக்க உள்ளனர்.

சுவிட்சர்லாந்தில் கடந்த 2000 ஆண்டில் இருந்து சிறப்பாக செயல்பட்டுவரும் தொண்டு நிறுவனங்களில் ஒன்று Schweizer Tafel.

இதன் நிறுவனரான Yvonne Kurzmeyer என்பவருக்கே இந்த ஆண்டிற்கான சிறப்பு விருது வழங்கப்பட உள்ளது.வீணடிக்கப்படும் உணவுகளை சேகரித்து அதை மறு விநியோகம் செய்வதில் Yvonne Kurzmeyer சிறப்பாக செயல்பட்டதாக கூறி 200,000 பிராங்குகள் பெருமதியான விருதை வழங்க உள்ளனர்.

Schweizer Tafel எனப்படும் இந்த தொண்டு நிறுவனமானது சுவிஸில் 12 பிராந்தியங்களில் செயல்பட்டு வருகிறது.80 தன்னார்வலர்கள் மற்றும் ஊழியர்களுடன் செயல்பட்டுவரும் இந்த நிறுவனமானது கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 4,000 டன் வீணடிக்கப்பட்ட உணவுகளை மறுவிநியோகம் செய்துள்ளது.

அதாவது நாள் ஒன்றிற்கு 16 டன் உணவுகளை ஏழை எளிய மக்களுக்கு விநியோகித்துள்ளனர்.

பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து மட்டுமே செயல்பட்டுவரும் இந்த தொண்டு நிறுவனமானது,சுவிட்சர்லாந்தில் உணவு வீணாக்குதல் மற்றும் பட்டினி தொடர்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது

Comments (0)
Add Comment