தலைக்கு ரூ. 8 லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்ட மாவோயிஸ்ட் சரண்..!!

சத்தீஸ்கர் மாநிலத்தின் சுக்மா மாவட்டத்தில் உள்ள ஜகர்குண்டா பகுதியைச் சேர்ந்தவர் புத்ரா. இவர் மாவோயிஸ்டுகளுக்கு வெடிகுண்டுகள் தயாரிக்க பொருட்களை வழங்கி உதவி செய்து வந்துள்ளார்.

பின்னர், 2007-ல் மாவோயிஸ்டில் சேர்ந்த புத்ரா 2010-ல் துணை கமாண்டராகியுள்ளார். 2010-ம் ஆண்டு காங்கிரஸ் தலைவர் அவ்தேஷ் கவுதம் வீடு உள்பட பல்வேறு வீடுகள் மீது மாவோஸ்டுகள் தாக்குதல் நடத்தினர். இதில் இரண்டு பொதுமக்களும், ஒரு மாவோஸ்டும் கொல்லப்பட்டனர். 2012-ல் மத்திய தொழில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 6 பேர் மாவோயிஸ்ட் தாக்குலில் கொல்லப்பட்டனர். இந்த சம்பவங்களில் புத்ரா ஈடுபட்டது தெரியவந்தது.

போலீசார் தேடிவருதையறிந்த புத்ரா தலைமறைவானார். இதனால் அவரை கண்டுபிடித்து தரும் நபருக்கு 8 லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்று போலீசார் தரப்பில் அறிவிப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் தன்டேவாடா மாவட்டத்தில் புத்ரா போலீசாரிடம் சரணடைந்தார். ஆயுதங்களை கைவிட்டு மனம் திருந்தி சரணடைந்ததால் அவருடைய மறுவாழ்விற்காக 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்த போலீசார், இன்னும் அவருக்கு உதவிகள் வழங்கப்படும் என்றனர்.

Comments (0)
Add Comment