ஜம்மு-காஷ்மீரில் 800 மீட்டர் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 7 பேர் பலி: 25 பேர் காயம்..!!

ஜம்மு-காஷ்மீர் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கனேட்டர் கிராமத்தில் உள்ள மக்கள் ஒரு வாகனத்தில் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மிகவும் பிரபலமான ஷர்தான் ஷெரீப் புண்ணிய ஸ்தலத்திற்கு சென்றனர். மதியம் பஸ் ஒரு வளைவில் திரும்பும்போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து 800 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 25 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments (0)
Add Comment