பிரான்சில் வாகனத்தை சோதித்து பார்த்த போது பொலிசாருக்கு காத்திருந்த அதிர்ச்சி… விசாரணையில் தெரிந்த உண்மை..!!

பிரான்சில் 30 பேரை வாகனத்தில் மறைத்து ஆட்கடத்திலில் ஈடுபட்ட சிலர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று Nîmes நகரின் நண்பகலில் பொலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது A9 வீதியில் வைத்து காவல்துறையினர் வாகனத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வாகனத்தை சோதனை செய்த போது, உள்ளே 30 பேர் மறைத்துவைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

அவர்கள் அனைவரும் யார் என்று மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அதில் சிலர் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் எனவும், சட்டவிரோத குடியேற்றம் கொண்டவர்கள் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இவர்கள் அனைவரையும் மொனாகோ நகர் வழியாக இத்தாலிக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 30 பேரையும் கைது செய்த காவல்துறையினர், வாகனத்தில் இருந்த மேலும் இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Comments (0)
Add Comment