ஸ்பெயின்: ஹெலிகாப்டர்- குட்டி விமானம் நடுவானில் மோதல்- ஐந்து பேர் பலி..!!

ஸ்பெயின் நாட்டிற்கு சொந்தமான தீவுகளில் ஒன்று மல்லோர்கா. மிகவும் பிரபலம் வாய்ந்த சுற்றுத்தலமாக விளங்கும் இந்தத் தீவில் உள்ள இன்கா பகுதியில் இன்று ஹெலிகாப்டர் ஒன்றும் குட்டி விமானம் ஒன்றும் நடுவானில் திடீரென மோதின.

இதில் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஹெலிகாப்டரில் பயணம் செய்த மூன்று பேரும், இரண்டு இருக்கைகள் கொண்ட சிறிய வகை விமானத்தில் பயணம் செய்த இரண்டு பேரும் உயிரிழந்தனர். மல்லோர்கா அரசு அதை உறுதிப்படுத்தியுள்ளது.

Comments (0)
Add Comment