கேப்டனாக டாப்புக்கு போனார்.. ஆனா பேட்டிங்ல கோட்டை விட்டார்! (படங்கள்)

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி ஒரே நாளில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இடத்தில் உச்சம் பெற்றார். மற்றொரு இடத்தில் உச்ச இடத்தை நழுவ விட்டு இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி சமீப காலமாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2 – 0 என கைப்பற்றி அசத்தியது. அதில் கோலி ஒரு முக்கிய சாதனை புரிந்தார்.

ஒரே நாளில் நடந்தது அதே சமயம், சிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் ஆன விராட் கோலி தன் இடத்தை நழுவ விட்டு உள்ளார். இந்த இரு சம்பவங்களும் சில மணி நேர இடைவெளியில் நடந்தது. இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இரண்டாவது டெஸ்ட் முடிந்த மறுநாள் ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியானது. டெஸ்ட் கிரிக்கெட் சாதனை டெஸ்ட் கிரிக்கெட் சாதனை இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடரின் இரு போட்டிகளையும் கேப்டனாக வென்று கொடுத்தார் கோலி. இரண்டாவது டெஸ்ட் வெற்றி அவரின் கேப்டனாக கோலியின் 28வது டெஸ்ட் வெற்றி ஆகும். அதிக வெற்றி அதிக வெற்றி இந்திய அளவில் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றி பெற்றுக் கொடுத்த கேப்டன் என்ற சாதனையை செய்தார் கோலி. கேப்டனாக 48 டெஸ்ட் போட்டிகளில் 28 வெற்றிகளை பெற்றுக் கொடுத்துள்ளார் கோலி.

தோனியை முறியடித்துள்ளார் தோனியை முறியடித்துள்ளார் தோனி 60 டெஸ்ட் போட்டிகளில் 27 வெற்றிகள் பெற்று இருந்தார். அவரை முறியடித்துள்ளார் கேப்டன் கோலி. அதே முன்னதாக கங்குலி (21 டெஸ்ட் வெற்றிகள்), அசாருதீன் (14 டெஸ்ட் வெற்றிகள்) ஆகியோரையும் வீழ்த்தி இருந்தார். முதல் இடத்தை இழந்தார் முதல் இடத்தை இழந்தார் இந்திய டெஸ்ட் கேப்டன்களில் சிறந்தவர் என்ற சாதனையை செய்த அதே வேளையில், கடந்த ஓராண்டாக டெஸ்ட் போட்டி பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் தான் வகித்து வந்த முதல் இடத்தை ஸ்டீவ் ஸ்மித்திடம் இழந்துள்ளார். முன்பு தட்டிப் பறித்தார் கோலி முன்பு தட்டிப் பறித்தார் கோலி ஸ்டீவ் ஸ்மித் நீண்ட காலமாக டெஸ்ட் போட்டிகள் தரவரிசையில் முதல் இடத்தில் இருந்தார்.

அவர் கடந்த ஆண்டு தடை செய்யப்பட போது, கோலி முதல் இடத்தை தட்டிப் பறித்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் தடை முடிந்து ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறார். ஆஷசில் ரன்கள் குவித்தார் ஸ்மித் ஆஷஸ் தொடரில் மூன்று இன்னிங்க்ஸ்களில் இரண்டு சதங்கள் மற்றும் 92 ரன்கள் குவித்தார் ஸ்டீவ் ஸ்மித். தன் தடைக்கு பின் ஆடிய மூன்றே இன்னிங்க்ஸ்களில் முதல் இடத்தை மீண்டும் தனதாக்கிக் கொண்டார்.

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி வெஸ்ட் இண்டீஸ் தொடரில் கோலி அதே சமயம் கோலி, வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. 4 இன்னிங்க்ஸ்களில் 136 ரன்கள் மட்டுமே குவித்தார். அவரது சராசரி 34 மட்டுமே. அவரை விட ஹனுமா விஹாரி மற்றும் ரஹானே அதிக ரன்கள் குவித்து இருந்தனர். டக் அவுட் ஆனார் டக் அவுட் ஆனார் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இரண்டாம் இன்னிங்க்ஸில் முதல் பந்தில் டக் அவுட் ஆனார்.

அது தான் அவருக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது எனலாம். அதன் விளைவாகவே, கோலி ஒரு புள்ளியில் தன் முதல் இடத்தை இழந்தார். ஒரே டெஸ்டில் இரு நிகழ்வு ஒரே டெஸ்டில் இரு நிகழ்வு ஒரே டெஸ்ட் போட்டியில், போட்டியின் வெற்றியால் சிறந்த டெஸ்ட் கேப்டன் என்ற பெயரையும், டக் அவுட் ஆனதால் முதல் இடத்தையும் இழந்தார் கேப்டன் கோலி. ஸ்டீவ் ஸ்மித் இன்னும் இரண்டு ஆஷஸ் போட்டிகளில் ஆட உள்ளதால், அவர் இன்னும் அதிக புள்ளிகள் பெற வாய்ப்பு உள்ளது.

Comments (0)
Add Comment