இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

டார்க் சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன.

​கொகோவின் வெவ்வேறு தினசரி அளவை தினசரி உட்கொண்டு பரிசோதிக்கப்பட்ட போது, கொகோ உண்மையில் இதய நோய்கள் வரமால் தடுக்கிறது என்பது கண்டறியப்பட்டது.

சொக்லேட்டில் உள்ள அற்புதமான மருத்துவ நன்மை என்னவென்றால், இது உங்கள் இரத்த அழுத்தத்தை குறைக்கும். மேலும் சொக்லேட் உட்கொள்வதால் உங்களது மூளை செயல் திறன், ஞாபக சக்தி, ஆற்றல் ஆகியவை அதிகரிக்கறது. அதில், டார்க் சொக்லெட் சாப்பிடுவதால் இதயம் ஆரோக்கியமாக இருக்கிறது எனத் தெரியவந்ததுள்ளமை குறிப்பிடத்தக்கது.

டார்க் சொக்லெட்டுகளைச் சாப்பிடுவது, தமனிகளின் நெகிழ்வுத் தன்மையைத் தக்க வைக்க உதவுகிறது. மேலும் இரத்தத்தில் வெள்ளை அணுக்கள் இரத்த நாளச்சுவர்களில் ஒட்டும் தன்மையை வெகுவாகக் குறைக்கிறது.

Comments (0)
Add Comment