மதுபான விடுதியில் பால் கேட்டு அடம்பிடித்த 3 வயது சிறுமி: கொண்டாடிய சமூகவலைதளம்..!!

குரோஷியா நாட்டில் பெற்றோருடன் விடுமுறையை கழிக்க சென்ற 3 வயது சிறுமி, பசியால் அங்குள்ள மதுபான விடுதியில் சென்று பால் கேட்டு அடம் பிடித்த சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது.

குரோஷியாவின் டுப்ரோவ்னிக் பகுதியில் மிலா ஆண்டர்சன் என்ற 3 வயது சிறுமியின் குடும்பம் விடுமுறையை கழித்து வந்துள்ளது.

சம்பவத்தன்று மிலாவுடன் நகரம் பார்க்க சென்ற அவரது பெற்றோரான பென் மற்றும் சோஃபி, மிலாவுக்கான பால் எடுத்துச் செல்ல மறந்துள்ளனர்.

இதனிடையே நீர் விளையாட்டில் முனைப்பு காட்டிக் கொண்டிருந்த மிலாவுக்கு பசி எடுத்துள்ளது.பெற்றோரிடம் முறையிட்டும், அவர்களால் ஒரு தீர்வை எட்ட முடியவில்லை. உடனே மிலா, அருகாமையில் உள்ள மதுபான விடுதிக்கு சென்று தமக்கு ஒரு போத்தல் பால் வேண்டும் என கேட்டுள்ளார்

இதைக் கேட்டு வியந்த விடுதி ஊழியர், இங்கு பால் விற்பதில்லை என மிலாவிடம் தெரிவித்துள்ளார்.ஒரு கிண்ணம் பால் கிடைத்தாலும் போதும் என மீண்டும் மிலா அடம் பிடித்துள்ளார்.

மகளின் இந்த நடவடிக்கைகளை அவருக்கு தெரியாமல் தந்தை பென் காணொளியாக பதிவு செய்து, அவரே சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

சிறுமியின் தன்னம்பிக்கையை பாராட்டி, அந்த மதுபான விடுதி ஊழியர் பின்னர் மிலாவுக்கு ஒரு கிண்ணம் பால் அளித்ததையும் பென் அந்த காணொளியுடன் பகிர்ந்துள்ளார்.தற்போது அந்த காணொளியானது சமூக வலைதள பயனர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது

Comments (0)
Add Comment