2007இல் காட்டிய அதே வித்தை.. ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை..!! (வீடியோ, படங்கள்)

இலங்கை – நியூசிலாந்து இடையே ஆன மூன்றாவது டி20 தொடரில் ஹாட்ரிக்கை விட பெரிய சாதனை செய்த மலிங்காவை கண்டு கிரிக்கெட் உலகம் மிரண்டு போய் உள்ளது. நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 போட்டியில் வரிசையாக நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்கள் வீழ்த்தி இருக்கிறார் மலிங்கா. இந்த சாதனையை இரண்டு முறை செய்த ஒரே வீரர் அவர் தான். அது மட்டுமல்ல, மேலும் பல சாதனைகளையும் அடித்து தூக்கி இருக்கும் மலிங்கா, கேப்டனாக தன் அணியை ஆறுதல் வெற்றி பெற வைத்தார்.

டி20 தொடர் இலங்கை – நியூசிலாந்து இடையே ஆன டி20 தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றது நியூசிலாந்து. தொடரையும் கைப்பற்றியது. அடுத்து மூன்றாவது டி20 போட்டியில் இரு அணிகளும் மோதின. இலங்கை டி20 அணிக்கு மலிங்கா தான் கேப்டன் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கை இன்னிங்க்ஸ் இலங்கை இன்னிங்க்ஸ் இந்தப் டி20 போட்டியில் இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. சுமாராக ஆடிய இலங்கை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் மட்டுமே எடுத்தது.

குணதிலகா 30, டிக்வெல்லா 24, மதுஷங்கா 20 ரன்கள் எடுத்தனர். மலிங்கா மேஜிக் மலிங்கா மேஜிக் அடுத்து நியூசிலாந்து அணி பேட்டிங் ஆடியது. போட்டியின் மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் மலிங்கா கோலின் மன்றோ விக்கெட்டை வீழ்த்தினார். அது மலிங்காவின் 100வது டி20 போட்டி விக்கெட் ஆகும். 4 பந்துகளில் 4 விக்கெட்கள் எப்படி? 4 பந்துகளில் 4 விக்கெட்கள் எப்படி? மன்றோ பவுல்டு அவுட் ஆனார். தொடர்ந்து அடுத்த மூன்று பந்துகளில் ரூதர்போர்டு, கிராண்ட்ஹோம், ராஸ் டெய்லர் டக் அவுட் ஆகினர். 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தினார் மலிங்கா. 12 ஆண்டுகள் கழித்து அதே 4 பந்து – 4 விக்கெட் சாதனையை செய்தார்.

இலங்கை வெற்றி இலங்கை வெற்றி அதன் பின் தடுமாறிய நியூசிலாந்து அணி 16 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்து 88 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. மலிங்கா 5 விக்கெட்கள் வீழ்த்தி ஆட்டநாயகன் விருது பெற்றார். டி20 தொடரை இழந்த நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்று, ஆறுதல் அடைந்தது இலங்கை அணி.

இரண்டாவது முறை மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்துவது முதல் முறை அல்ல. 2007 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்கள் வீழ்த்தி உள்ளார். மிகவும் கடினமான இந்த சாதனையை இரண்டு முறை செய்த ஒரே வீரர் மலிங்கா தான். 100 டி20 விக்கெட்கள் 100 டி20 விக்கெட்கள் இது மட்டுமின்றி மேலும் சில சாதனைகளை செய்துள்ளார் மலிங்கா. சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்கள் என்ற மைல்கல்லை எட்டிய முதல் வீரர் மலிங்கா தான். மேலும், டி20 போட்டிகளில் இரண்டு முறை 5 விக்கெட்கள் அல்லது அதற்கும் மேல் வீழ்த்தி இருக்கிறார்.

ஹாட்ரிக் மன்னன் ஹாட்ரிக் மன்னன் மலிங்காவின் இந்த ஹாட்ரிக் விக்கெட் டி20யில் அவரது இரண்டாவது ஹாட்ரிக் ஆகும். ஒருநாள் போட்டிகளில் மூன்று முறை ஹாட்ரிக் விக்கெட் எடுத்துள்ள மலிங்கா, அதிக ஹாட்ரிக் எடுத்த பந்துவீச்சாளர்கள் பட்டியலில் வாசிம் அக்ரமை வீழ்த்தி முதல் இடத்தை பிடித்து இருக்கிறார். ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு ரசிகர்கள் ஆர்ப்பரிப்பு மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட் எடுத்த உடன் இலங்கை ரசிகர்கள் மைதானத்தில் ஆர்ப்பரித்தனர். ஒருநாள் போட்டிகளில் ஓய்வு பெற்று விட்ட ஒரு வீரர், 36 வயதாகும் ஒரு வேகப் பந்துவீச்சாளர் எப்படி தான் 12 ஆண்டுகள் முன்பு செய்த 4 விக்கெட் சாதனையை மீண்டும் செய்தார் என கிரிக்கெட் உலகம் மிரண்டு போய் உள்ளது.

Comments (0)
Add Comment