கத்தியை காட்டி மிரட்டிய திருடன்: இளம்பெண் செய்த துணிச்சலான செயல்..!!

காப்பீட்டு அலுவலகம் ஒன்றில் பணியாற்றிய இளம்பெண் ஒருவர், கத்தியை காட்டி மிரட்டிய திருடனுடன் துணிச்சலாக சண்டையிடும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

oncepscion Escalante (23) என்னும் இளம்பெண் கலிபோர்னியாவின் Pomonaவிலுள்ள தனது அலுவலகத்தில் தனியாக வேலை செய்துகொண்டிருந்தார்.

அப்போது ஒரு நபர் வந்து தனக்கு காப்பீடு தேவை என்று கூற, அவரை அமர வைத்து

தேவையான ஆவணங்களை தயார் செய்துகொண்டிருந்திருக்கிறார் Escalante. அதற்குள் காப்பீட்டு பணம் செலுத்த வந்த இருவர் பணம் செலுத்திவிட்டுப்போக, அதை கவனித்த அந்த நபர் மெதுவாக எழுந்து Escalanteஇன் அருகில் வந்திருக்கிறார்

உன்னை ஒன்றும் செய்ய மாட்டேன், பணத்தை மட்டும் கொடுத்துவிடு என்று அவர் கேட்க, Escalante மறுக்க, திருடன் கத்தியைக் காட்டி மிரட்ட, எழுந்து திருடனுடன் சண்டையிட்டிருக்கிறார் Escalante. அந்த நபர் Escalanteஇன் தலைமுடியைப் பிடித்துக் கொள்ள, விடாமல் Escalante தாக்க, சுமார் ஒரு நிமிடத்திற்கு அந்த சண்டை நீடித்திருக்கிறது. அதற்குள் அந்த திருடனிடம் இருந்த கத்தி கீழே விழ, அதை எடுக்க இருவருமே முயன்றிருக்கிறார்கள்

ஆனால், அதற்குள் அந்த திருடன், Escalante தனது கணினியின் அருகில் வைத்த பணத்தை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான்.

கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், அதை எப்படி விடுவது என்கிறார் Escalante. பொலிசார் CCTV காட்சிகளின் அடிப்படையில் திருடனை தேடிவருகிறார்கள்.

துணிச்சலாக திருடனுடன் போராடிய Escalante, ஆனால் அப்படி செய்ய வேண்டாம் என்று மற்றவர்களைக் கேட்டுக் கொள்கிறார், கேட்பதைக் கொடுத்து விடுங்கள், அந்த நபர் கத்தியால் குத்தாதது எனது அதிர்ஷ்டம், குத்தியிருந்தால் என்ன ஆகியிருக்கும் என்கிறார் அவர்

இதில் விசேஷம் என்னவென்றால் Escalanteக்கு உடலில் ஒரு அடி கூட படவில்லை என்பதுதான்.ஆனால் Escalanteஇடம் அடி வாங்கிய திருடனுக்கு எவ்வளவு அடிபட்டது என்பது, அவன் பிடிபட்டபிறகுதான் தெரியப்போகிறது

https://videos.dailymail.co.uk/video/mol/2019/09/06/5766226559891387235/640x360_MP4_5766226559891387235.mp4

Comments (0)
Add Comment