ஒரு ரூபாய்க்கு துணி.. அடித்துக்கொண்ட ஏராளமான பெண்கள்! வீடியோ..!

ரஷ்யாவில் ஒரு ரூபாய் மதிப்பில் துணிகளை விற்பதாக அறிவித்த சில நிமிடங்களில், கூட்டமாக கடைக்குள் புகுந்த பெண்கள் ஒருவரையோருவர் சண்டையிட்டு துணிகளை வாங்கும் வீடியோ வெளியாகியுள்ளது.

ரஷ்யாவின் Vladikavkaz என்ற பகுதியில் ஸ்டோலிஸ்டா என்ற கடை நிர்வாகம் உள்ளது. இந்நிர்வாகம் இந்திய மதிப்பில் ஒரு ரூபாய் என்ற விலையில் துணிகள் விற்கப்படும் என்ற அறிவித்தது.

இதனைக் கண்டதும் பெண்கள் பலர் கூட்டமாக கடைக்குள் நுழைந்தனர். கடை திறந்த மறுவிநாடியே வேகமாக நுழைந்த அவர்கள், கடைக்குள் வைக்கப்பட்டிருந்த துணிகளை அள்ளிக் கொண்டனர்.

பலர் ஒரே துணிக்கும், பிறர் கையில் வைத்திருக்கும் துணியைப் பறிக்கவும் செய்தனர். இந்த போட்டியில் ஒருவரை ஒருவர் தள்ளி தாக்கிக் கொண்டனர்

இதனால் கடை திறக்கப்பட்ட 5 நிமிடங்களில் அனைத்து துணிகளும் விற்றுத் தீர்ந்தன. இதுதொடர்பான வீடியோ வெளியாகியுள்ள நிலையில், பலரும் பெண்களின் செயல்களை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், இதே போன்றதொரு சலுகையை விரைவில் அறிவிக்க இருப்பதாக அந்த கடை நிர்வாகம் அறிவித்துள்ளது

Comments (0)
Add Comment