வவுனியாவில் நான்கு குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு!! (படங்கள்)

வவுனியாவில் ஒர் நேர உணவிற்கு வழியின்றி தவிக்கும் நான்கு குடும்பங்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு

வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம்,இராசேந்திரகுளம் பகுதிகளை சேர்ந்த நான்கு குடும்பங்களுக்கு இன்று (09.09.2019) உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன

பிள்ளைகளினால் கைவிடப்பட்ட நிலையில் ஒர் நேர உணவிற்கு வழியின்றி அரசாங்கத்தினால் வழங்கப்படும் மாதாந்த 5000 ரூபா ஒய்வூதிய உதவிப்பணத்தில் தங்களது வாழ்க்கையினை நாடாத்தி வரும் இரு குடும்பத்தினர் உட்பட நான்கு குடும்பத்தினருக்கு இவ் உதவித்திட்டம் வழங்கி வைக்கப்பட்டது.

உதவி வழங்கி வைக்கப்பட்ட சமயத்தில் பிள்ளைகளின்றி தனிமையில் வாழும் குறித்த தாய்,தந்தைகள் கண்ணீர் மல்கி கிராம சேவையாளர் உட்பட ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தமை அங்கிருந்த அனைவரது மனங்களையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

ஊடகவியலாளர் பா.கதீஷன் அவர்களின் வேண்டுகோளிக்கினங்க ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்த நடராஜா சிவகுமார் அவர்களின் நிதியில் ஒர் குடும்பத்தினருக்கு 5000.00 ரூபா பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய பொதியோன்றும் சிறு பணமும் வீதம் (மொத்தமாக ரூபா.20000.00 மற்றும் சிறு தொகை பணம்) நான்கு குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

இச் செயற்றிட்டத்தில் ஊடகவியலாளர் பா.கதீஷன் , இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் ப.பிரதீப் , ஜேர்மன் நாட்டிலிருந்து இலங்கை வந்த நடாராஜா சிவகுமார் மற்றும் அவரது உறவினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜேர்மன் நாட்டில் வசிக்கும் நடராஜா சிவகுமார் அவர்கள் மாதாந்தம் வறுமைக்கோட்டிற்குட்பட்ட குடும்பங்களுக்கு இவ்வாறான பல உதவித்திட்டங்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment