நாடகப்போட்டியில் வவுனியா அல் இக்பால் ம.வி முதலிடம்!! (படங்கள்)

ஜோன்கீல்ஸ் நடத்திய ஆங்கில மொழி நாடகப்போட்டியில் வவுனியா அல் இக்பால் ம.வி முதலிடம்

வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற ஆங்கில மொழி நாடகப் போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றுக் கொண்டுள்ளது.

குறித்த பாடசாலையில் இன்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது வெற்றி பெற்ற மாணவர்களுக்கான வெற்றிக் கேடயம் மற்றும் சான்றிதழ் என்பன பாடசாலையின் அதிபர் ஏ.கே. உபைத் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

கல்வி திணைக்களத்தின் அனுசரணையுடன்
ஜோன்கீல்ஸ் நிறுவனம் மாணவர்களின் ஆங்கில மொழியறிவை விருத்தி செய்யும் நோக்கில் வடமாகாணத்திற்குட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் விசேட கல்வி செயற்திட்டம் ஓன்றை முன்னெடுத்துள்ளது.

குறித்த மாணவர்கள் மத்தியில் ஆங்கில மொழியிலான நாடகப் போட்டியை நடத்தியது. இதில் வடமாகாணத்திற்கு உட்பட்ட பல பாடசாலைகள் பங்குபற்றின. குறித்த போட்டியில் வவுனியா அல் இக்பால் மகாவித்தியாலயம் முதலாமிடத்தை பெற்றதுடன், நடைபெற்ற நாடகங்களில் சிறந்த நடிகராகவும் அல் இக்பால் மகாவித்தியாலயத்தைச் சேர்ந்த ரி.எம். சபீக் தெரிவு செய்யப்பட்டு வெற்றிக் கேடயத்தை பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment