வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் ஆய்வுகூடம் திறந்து வைப்பு!! (படங்கள்)

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் தொழிநுட்ப ஆய்வுகூடம் திறந்து வைப்பு

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் தொழிநுட்ப ஆய்வுகூடம் இன்று (09.09.2019) காலை 10.30 மணியளவில் பாடசாலையின் முதல்வர் தாமோதரம்பிள்ளை அமிர்தலிங்கம் அவர்களின் தலமையில் திறந்து வைக்கப்பட்டது.

தொழிநுட்ப ஆய்வுகூடத்தினை அதிபருடன் இணைந்து பிரதம விருந்தினரும் சிறப்பு விருந்தினரும் திறந்து வைத்ததுடன் பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தன

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் மற்றும் சிறப்பு விருந்தினராக வவுனியா தெற்கு வலயக்கல்வி பணிப்பாளர் முத்து இராதகிருஷ்ணன் மற்றும் வலயக்கல்வி பணிமணை அதிகாரிகள் , ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment