274வது மாதிாி கிராமத்தை ஊரெழுவில் திறந்துவைத்தாா் சஜித்!! (படங்கள்)

வலி,கிழக்கு- ஊரெழு கிராமத்தில் “செமட்ட செவண” தேசிய வேலை திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு ள்ள 274வது மாதிாி கிராமம் இன்று காலை வீடமைப்பு மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சா் சஜித் பிறேமதாஸவினால் திறந்துவைக்கப்பட்டிருக்கின்றது.

இங்கு 19 குடும்பங்களுக்கான வீடுகள், நீர் மற்றும் மின்சார வசதி, உள்ளகப் பாதை வசதி, பிரசேவப் பாதை வசதி என்பனவற்றுடன் அமைக்கின்றது. நிகழ்வில் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர், வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர், வலி.கிழக்கு பிரதேச சபை செயலர், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், சித்தாத்தன், என். சரவணபன் , அரச அதிகாரிகள் , பொது மக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

Comments (0)
Add Comment