வவுனியாவில் 232 பாடசாலை பிள்ளைகளுக்கு பால் வழங்கும் செயற்திட்டம்!! (படங்கள்)

லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் தாயக உறவுகளுக்கு பல வருடங்களாக ஆற்றி வரும் சமூக பணிகளில் ஒரு கட்டமாக, வறிய மாணவர்களின் காலை ஆகாரத்திற்கு நிகராக ஒரு கப் பசும் பால் வழங்கும் திட்டத்தின் கீழ் வவுனியாவில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் இன்று (10.09.2019) முன்னெடுக்கப்பட்டது.

இதன் முதற்கட்டமாக தம்பனைசோலை கேதீஸ்வர வித்தியாலயத்தில் கல்வி பயிலும் 60 மாணவர்களுக்கும் வவுனியா இராசேந்திரன்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி பயிலும் 172 மாணவர்களுக்கும் போசாக்கை மேம்படுத்த பசும் பால் வழங்கும் திட்டம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இச் செயற்றிடத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு தம்பனைசோலை கேதீஸ்வர வித்தியாலயத்தில் பாடசாலையின் ஒன்றுகூடல் மண்டபத்தில் அதிபர் கோமதி சத்தியகுமார் தலமையில் இன்று (10.09.2019) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றிருந்தது.

தமிழ் விருட்சம் அமைப்பின் வேண்டுகோளிக்கினங்க லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலய நிர்வாகத்தினால் இச் செயற்றிட்டம் முன்னேடுக்கப்படுகின்றது

இவ் ஆரம்ப நிகழ்வில் லண்டன் ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கை அம்மன் ஆலயத் தலைவர் கருணைலிங்கம் மற்றும் துனைவியார் ஆனந்தி , அருங்காவற் சபை உறுப்பினர் ச.ஸ்ரீரங்கன் மற்றும் அவரது துனைவியார் மனோகரி உட்பட லண்டனிலிருந்து வருகை தந்த ஆலய உறுப்பினர்கள் மற்றும் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் , செயலாளர் மாணிக்கம் ஜெகன் மற்றும் ஆசிரியர்கள் , மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டார்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment