வவுனியா மன்னார் வீதியில் இருவர் படுகாயம்!! (படங்கள்)

வவுனியா மன்னார் வீதியில் பாடசாலை மாணவணை மோதித்தள்ளிய மோட்டார் சைக்கில் : இருவர் படுகாயம்

வவுனியா மன்னார் வீதியில் இன்று (10.09.2019) காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கில் – துவிச்சக்கரவண்டி விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வவுனியா மன்னார் வீதியுடாக துவிச்சக்கரவண்டியில் பயணித்துக்கொண்டிருந்த பாடசாலை மாணவனோருவன் பட்டானீச்சூர் பகுதியில் வீதியில் மறுபக்கம் மாற முற்பட்ட சமயத்தில் மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கில் துவிக்கரவண்டியினை மோதித்தள்ளி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் துவிச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் சைக்கில் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் துவிச்சக்கரவண்டியில் பயணித்த 16 வயதுடைய பாடசாலை மாணவனும் மோட்டார் சைக்கிலின் சாரதியான 28 வயதுடைய நபரும் படுகாயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொதுவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா போக்குவரத்து பொலிஸார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
“அதிரடி” இணையத்துக்காக வவுனியாவில் இருந்து “இதயசந்திரன்”

Comments (0)
Add Comment